🕉️ பிரதோஷம் 🕉️

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, உலக உயிர்களை காத்தருளிய நாளே பிரதோஷ திருநாளாக போற்றப்படுகிறது.

🪷 பிரதோஷத்தின் வகைகள்

🌞 நித்திய பிரதோஷம்

🪔 பட்சப் பிரதோஷம்

🌕 மாதப் பிரதோஷம்

🔥 மகாப்பிரதோஷம்

💫 பிரளயப் பிரதோஷம்

🌕 பிரதோஷ நேரம் 🌕

மாலை சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகும் உள்ள 7½ நாழிகை காலமே பிரதோஷ காலமாகும். இது பொதுவாக மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரத்தைக் குறிக்கிறது.

🌸 சனி மகாப்பிரதோஷம் 🌸

சனிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷமே, சனி மகாப்பிரதோஷமாகும். மற்ற பிரதோஷத்தை விட, இது கூடுதல் சிறப்பைக் கொண்டது.

🌙 2025- மகாப்பிரதோஷம் 🌙

இந்தாண்டின் கடைசி மகா பிரதோஷத்தில், அந்த மகா தேவனை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ பலனை அடையலாம்.

✨ சிறப்பு! ✨

"வித்யா" என்றால் அறிவு, "ஆரம்பம்" என்றால் துவக்கம். விஜயதசமியன்று அரிசி அல்லது மணலில் எழுத்துக்களை எழுத வைத்து, குழந்தைகளுக்கான கல்வியறிவை துவக்கி வைப்பதே வித்யாரம்பமாகும்.

🕉️ மகாப்பிரதோஷ விரதம் 🕉️

நாள் முழுவதும் உபவாசமிருந்து, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறி, சிவாலயம் சென்று நந்திதேவர் மற்றும் சிவபெருமானை வணங்கி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

🪔 சிவபுராணம் 🪔

சனி மகாப்பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு பிரியமான மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் படிப்பது மிகவும் சிறப்பாகும்.