சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, புறநானூறு மற்றும் நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் 'தை நிலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலின் சுவர்களில் பொங்கல் விழா கொண்டாடியதற்கான ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகளும் உள்ளது.
பல்லவர் காலத்தில் பொங்கல் பண்டிகையானது 'தை திருநாள்' என அழைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்களை சித்தரிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
விஜயநகர காலத்தில் அரச விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அரண்மனையில் சிறப்பு விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் திருநாளானது பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கோயில் குளங்களில் ‘தை நீராடல் விழா’ என்ற பெயரில் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொங்கள் விழாவன்று வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவையுடன் வடை, பாயாசம், அப்பளம் போன்ற பாரம்பரிய உணவுகளும் படைக்கப்பட்டு பொங்கல் திருநாளானது கொண்டாடப்படுகிறது.
இன்றைய காலக்கட்டங்களில் பொங்கல் பண்டிகையானது, தமிழர் திருநாளாக அறிவிக்கப்பட்டு போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.