ஓணம் பண்டிகை முதன் முதலாக கொண்டாடப்பட்ட இடம் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையப்பன் கோயிலாகும்.
மன்னன் மகாபலியின் ஆணவத்தை அழிப்பதற்காக, மகாவிஷ்ணு வாமன அவதாரமெடுத்தது, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகிலுள்ள காட்கரை என்னும் இடமாகும்.
காட்கரை என்னும் இடத்தில் விஷ்ணு பகவான் குள்ள வடிவமான வாமன அவதாரத்தை எடுத்ததால், காக்கரையப்பன் ஆனார்.
திருக்காக்கரையப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஓணத் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் பத்து நாட்களும் வண்ண வண்ண பூக்கள் கொண்டு கோலமிடப்படும். இதற்கு அத்தப்பூ கோலம் என்று பெயராகும்.
பெண்கள் அனைவரும் கேரளத்தின் பாரம்பரியமான வெள்ளை நிற ஆடையை உடுத்திக் கொண்டு ஓணம் பண்டிகையை மேலும் சிறப்பாக்குகிறார்கள்.
ஆவணி மாதம் பூக்கள் மலரும் மாதம் என்பதாலும், ஓணம் பண்டிகை நாளில் பூக்களால் கோலமிட்டு, பூக்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.