
இன்று ஒரு தலைவர் பதவி ஏற்ற நாள் அல்ல, புதிய நம்பிக்கை பிறக்கும் நாள். அதோடு அனைத்து உயிர்களுக்கும் உயிரிடமாக விளங்கும் அன்னையரை போற்றும் (மே10) இந்நாளில், ஒரு சாதாரண மனிதனின் புது அத்தியாயம் தொடங்குகிறது.
கோட்டைக்கதவுகள் திறக்கின்றன, மக்களின் கனவுகள் உள்ளே நடக்கின்றன. ஒரு சாதாரண மனிதனின் சத்தம், இன்று ஆட்சியின் சத்தியமாக மாறுகிறது. வெறும் வாய் சொல்லாக இல்லாமல், செயலில் காட்டும் நம்பிக்கை நட்சத்திரம் மிளிர்கிறது! மேடையில் ஒரு தலைவர் மட்டும் இல்லை, மக்களின் எதிர்பார்ப்பும் நிற்கிறது.
வாக்குச்சாவடியில் விழுந்த ஒவ்வொரு ஓட்டும், இன்று வரலாறாக எழுகிறது. இளைஞர்களின் கனவுகள், முதியோரின் ஆசீர்வாதங்கள், பெண்களின் நம்பிக்கைகள், குழந்தைகளின் சந்தோஷங்கள் அனைத்தும் இந்த சத்தியத்தில் ஒலிக்கின்றன.
“நான்” என்ற சொல்லை தாண்டி, “நாம்” என்ற பயணம் தொடங்குகிறது. வெற்றியின் சிரிப்பை விட, பொறுப்பின் அமைதி முகத்தில் தெரிகிறது. நாற்காலி உயரமல்ல முக்கியம், அதை மக்கள் எதற்காக அளித்தார்கள் என்பதே முக்கியம். இந்த மண் பார்த்த பல ஆட்சிகளில், இன்று ஒரு புதிய அத்தியாயம் திறக்கிறது.
கைகளை கூப்பி நின்ற மக்கள், கண்களில் எதிர்காலத்தை வைத்திருக்கிறார்கள். சத்தியப்பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையும், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக மாறட்டும்.
அதிகாரம் அல்ல இது, அர்ப்பணிப்பின் ஆரம்பம்.
தமிழகம் இன்று பார்க்கிறது… ஒரு முதலமைச்சரை மட்டும் அல்ல, ஒரு புதிய காலத்தின் தொடக்கத்தை!
முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த புதிய பயணம், மக்கள் கனவுகளை நனவாக்கும் பொற்காலமாக அமையட்டும்!